தாத்தாவும் நானும்
என்னடா இது?
இதான் தாத்தா laptop.
அப்படின்னா?
lapனா மடி, topனா மேல. மடி மேல வச்சிக்கிற computer.
அட போக்கத்தவனே. அந்த காலத்துல என் மடி மேல உன் பாட்டிய உட்கார வச்சிப்பேன். இப்ப என்னடான்னா எதோ பொட்டிய வச்சிக்கிறானுங்க.
------------
என்னடா பன்றா?
blog அடிக்கறேன் தாத்தா.
ப்ளாக்கா அப்படின்னா?
அத எப்படி சொல்றது....ம்ம்ம்
ஏண்டா, கருப்ப தான இங்கிலீஸ்ல ப்ளாக்கும்பீங்க. அத சொல்லறதுக்கென்ன கொசக்கெட்டவனே.
-----------
டேய், உன்ன பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்கு.
தாத்தா...அவன் பையன்.
அடப்பாவி, முடி வளத்து சட பிண்ணி இருக்கான். கடுக்கன் போட்ருக்கான். பின்னாடி இருந்து பார்த்தா பொட்டபுள்ள மாதிரியே இருக்கான்.
அதான் தாத்தா இப்ப fashion.
என்னடா அவன் முடி பச்ச கலர்ல செம்பட்ட பாஞ்சிருக்கு?
தாத்தா...அது செம்பட்ட இல்ல. சாயம் பூசி இருக்கான். அதுவும் fashion.
ஏண்டா, உங்க பேஸன்ல, சோத்த வாயில தான போட்டுக்கறீங்க. இல்ல வேற எங்கயாச்சுமா.
------------
உன் பொண்டாட்டி எங்கடா?
அவ office போயிருக்கா. அவளுக்கு ராத்திரி shift தாத்தா.
நீ காலையில போயிடுவியா?
ஆமாம் தாத்தா.
அப்புறம் எதுக்குடா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.
-----------
போன மாசம் உங்க பெரிய தாத்தன் சாவுக்கு ஏன் வரல நீ.
எங்க தாத்தா, எங்க ரெண்டு பேருக்குமே officeல பயங்கர வேலை. வர முடியாத நெலம.
ஓ. சாயந்தரம் உன் பொண்டாட்டி அபியோட அம்மா செத்துட்டான்னு அழுதா. யாருடா அது அபி?
தாத்தா....அது கோலங்கள்ன்னு ஒரு TV நாடகத்துல வர பொண்ணு.
தாத்தன் சாவக்கூட டிவி பொட்டியில காட்டியிருந்தா அழுதிருப்பீங்களோ.
-----------
எவ்ளோடா சம்பாத்திக்கிற?
மாசம் 50,000 தாத்தா.
ராத்திரியில நல்லா தூங்குறியா?
எங்க தாத்தா. நல்லா தூங்கி வருஷ கணக்காகுது.
உன் வயசுல எனக்கு சம்பளம் 50 ரூவா தாண்டா. நான் கட்டய சாச்சா பொணம்தான். கோழி கூவுரவரைக்கும் என்ன நடந்தாலும் தெரியாது.
-----------
எப்படா புள்ள பெத்துக்க போறீங்க?
எங்க தாத்தா. முதல்ல ஒரு வீடு வாங்கனும். அப்புறம் ஒரு car வாங்கனும். அப்பறம் தான் குழந்தய பத்தி எல்லாம் யோசிக்கனும்.
சரி தான். நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டா உன் புள்ளய வீடும் காரும் தான பாத்துக்கனும்.
----------
சரிடா, நான் ஊருக்கு கெளம்பறேன்.
சரிங்க தாத்தா. போயிட்டு போன் பண்ணுங்க.
டேய் ஒன்னு சொல்றேன் மனசுல வச்சிக்க.
இந்த பூமியில நாம பொறந்தது வாழறத்துக்குடா. வெறுமனே உசுரோட இருந்து செத்து போறதுக்கில்ல. புரியுதா.
U and your GrandFather
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment